Thursday, January 24, 2008

தண்ணீரை காய்ச்சி குடிப்பதன் அவசியம்

எப்போதுமே தூய்மையான தண்ணீரை பருக வேண்டும். தண்ணீரை காய்ச்சி, ஆறவைத்தும் பருகலாம்.

குறிப்பாகமழைக்காலங்களில் தண்ணீரை காய்ச்சி குடிப்பது கட்டாயம். காரணம், தண்ணீர் மூலமாக மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் பரவுகின்றன.

மஞ்சள் காமாலை, இளம்பிள்ளை வாதம், வயிற்றுப் போக்கு, டைபாய்டு காய்ச்சல், குடலற்சி, குடல் புழுக்கள், நாடாப்புழு நீர்க்கட்டி மற்றும் நரம்பு சிலந்தி நோய் உள்ளிட்ட பல நோய்கள் தண்ணீரால் வருபவையே.இதன் காரணமாகத்தான் அரசு, சுகாதாரத்துறை போன்றவை சுத்தமான தண்ணீர் பருக வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்துகின்றன. நாமும் தண்ணீரை சுத்தமாக காய்ச்சி பருகவோமே!